எண்ணப் பிரசவம் என்பது...

எழுத்துக்கள் என்றுமே, நம் உள்ளத்தின் பிம்பம் தான் என்பது ஐயமல்ல. எதை நினைக்கிறோமோ அதைத் தானே எழுதுகிறோம். அதனால் தான் எழுத்தாளன் என்றுமே தனிமையை விரும்புகிறான். ஐயமே ,இல்லா வரிகள் அழகாக எழ வேண்டும் என்பதற்காக அவன் உள்ளிருந்து ஜபம் செய்கிறான். ஆது தான் மன ஒருமை எனும் புதையலை வெளிக்காட்டி, ஒரு பிரமாண்டப் படைப்பைப் படைக்கும் அளவுக்கு படைப்பாளனைக் கொண்டு செல்கின்றது என்றால் சரியானதே.


எழுத்துக் கடலில் குதித்து வெளிவருவது மிகவும் கடினம்;அதே நேரம் அக்கடலை அண்டுவதென்பது கூட ஸர்வ சாதாரண விடயம் கிடையாது.
  எழுத்தாற்றல் என்பது ஒருவன் இறைவனிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் ஒரு மேலான வரம். அது பிரயோகிக்க வேண்டிய விதத்தில் பிரயோகிக்கப்பட வேண்டும்;இல்லை மகிமை கெட்டு விடும்.

பேனை பற்றிய கைக்கு புத்தி போதும் துணைக்கு,துரும்பிலும் நார் எடுப்பானெழுத்தாளன். உத்திகள் கொண்டு ,தன் எழுத்துக்கு உயிர் கொடுத்து ,வாசிப்பவன் இரசனையைப் பிய்த்துச் சுவைத்துக் காணும் இனிமை!அது அளப்பரியது.
  அதனால் தான் என்றும் ஒரு எழுத்தாளன் தன் ஆவி விடுவிக்கும் உணர்ச்சிகளை தாவிப் பிடித்து அப்படியே பதித்து விடுகிரான் தப்பாது.

உண்மையில் ,சில வேலை அது அவன் அறிந்திராத அநுபவமாகக் கூட இருக்கலாம்;கண்டிராத காட்சிகளையும் கண்ணெதிரே பிரம்மைப் பட வைத்து திரைக்குள் நுழைகின்றான். திகைக்கக் கூடிய வடிவில் அவன் எண்ணம் கொதிக்கிறது!பறவுகின்ற நீராவி ,ஒரு புதுமைக் கோணமாகி ஒரு காகிதம் தான்;சில சொட்டு மை தான்,ஆனாலும் ஆழமான வரிகளை அவன் அமைக்கிறான்.

கருத்துக்கள் எந்தளவில் நம்பப்படுகின்றனவோ இல்லையோ;அதன் நம்பகத் தன்மையிலேயே சந்தேகப் படும் அளவுக்கு வாசகர் ஐயப்படுவர்,ஒரு சிறந்த எழுத்தாளனின் கைப்படப் பிறந்த படப்பு அங்கே காட்டப்பட்டால்.

வாசகனைக்  குருடனாக்கி,
பொய்யுரைத்தலே சிறந்த எழுத்தாளனின் வழி என்பதல்ல என் கருத்து. ஆனால் ,எழுத்தினாலேயே உலகைக் காட்டலாம். உண்மையை அடித்துக் கூறலாம்.

பிரசவத்தினின்றும் தாய்மை புறப்படும்;அது தூய்மையாக ,பிரசவித்தவன் தன்னொத்திருக்கும் வட்டத்துள் அதுவும் குணமுருப் பெற்றிருக்கும். தனக்குள்ளே முரண்படுவான் அவன்,ஐயப்படுவான்,ஆனந்தக் களிப்பு கொள்வான்; ஏன் அவ்வளவா? இல்லை!! ஒன்றுமே அற்ற சூனியம் பொங்க உவமைகளில் ஊடுருவுவான்.

அவ்வளவு போராட்டம்,முரண்பாடு இன்னும் பல கணக்கு. ஏற்ற இரக்க இதயத் துடிப்பு போல அவன் எண்ணங்களும் ஓடும் போது ஏதோ ஒரு இருட்டுக்குள் நுழைந்து கொண்டு வரும் அவனது படைப்பு உயர்வு பெறாமல் எப்படி இருக்க முடியும்?

Comments

Popular Posts